தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் கூட்டணி அமைப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியின் சேர்ப்பது புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு கட்சியின் துண்டினைப் போர்த்தி பொன்னாடை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். மேலும் இதே போன்று அயோத்தி பட்டினத்திலும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
