சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு எச்சரிக்கை காணொளி, அனைவரையும் கவனமாக இருக்குமாறு வலியுறுத்துகிறது. தெரியாத நபர்கள், வெளியூரில் இருந்து வருவதாகவும், குழந்தைக்கு உணவு வாங்க பணம் இல்லை என்றும் கூறி, தங்களிடம் உள்ள செல்போனை கொடுத்துவிட்டு பணம் கேட்பதாகவும் இதை நம்பி பணம் கொடுத்தால், அவர்கள் தரும் செல்போன் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு நபர் இப்படி வாங்கிய போனைத் திறந்து பார்த்தபோது, அது போலியானது என்பது தெரியவந்தது.
இதுபோன்ற மோசடிகளால் ஏமாறாமல் இருக்க, தெரியாத நபர்கள் செல்போன் விற்பதாக வந்தால் நம்பி வாங்க வேண்டாம் என்று காணொளியில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதுபோன்ற புதிய மோசடி தந்திரங்களைப் புரிந்துகொண்டு, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் கொடுப்பதற்கு முன், செல்போனின் உண்மைத்தன்மையை கவனமாக ஆராய்ந்து, மோசடியில் சிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
