திறமைக்கு எல்லை இல்லை, அதற்கு தேவை ஒரு சின்ன வாய்ப்பு மட்டுமே. இதை மெய்ப்பிக்கும் வகையில், ஒரு இளைஞனின் அசத்தல் நடன வீடியோ சமூக வலைதளங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது. கிராமப்புறமோ, சிறு நகரமோ, எந்த இடமாக இருந்தாலும் திறமை பளிச்சிடும் என்பதை இந்தப் பையனின் ஆட்டம் நிரூபிக்கிறது.
இன்ஸ்டாகிராமில் @corporate_vala0001 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், இவருக்கு சினிமாவிலோ, மேடை நிகழ்ச்சியிலோ வாய்ப்பு கொடுக்க வேண்டும் என புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்த வீடியோவில், பெண்கள் மத்தியில் ஒரு இளைஞன் அசத்தலாக நடனமாடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், ஒரு திறந்தவெளி முற்றத்தில் பெண்கள் அமர்ந்திருக்க, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நடுவே, ஒரு பையன் இசைக்கு ஏற்ப நடனமாடத் தொடங்குகிறான். முதலில் இது வெறும் விளையாட்டாகத் தோன்றினாலும், இசை உச்சத்தை எட்டும்போது, இவரது ஆட்டம் இரட்டிப்பு வேகமெடுக்கிறது.
முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கண்களால் அசத்தி, கைகளின் மென்மையான அசைவுகளால் பாடலை உயிர்ப்பிக்கிறார். பெண்ணைப் போல வெட்கப்பட்டு, நாணத்துடன் நடனமாடும் இவரது திறமை, பார்ப்போரை இவன் பையனா, பெண்ணா என யோசிக்க வைக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்தவர்கள், “இவனுக்கு ஹீரோயின் ரோலே கொடுக்கலாம்!” என்று கலகலப்பாக கமென்ட் செய்கின்றனர்.
