இந்திய ரயில்வேயில் முதல் முறையாக பயணித்த கனடா பெண்ணின் அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இந்த பயண இன்ஃப்ளூயன்ஸர், தனது தில்லி முதல் ராஜஸ்தான் வரையிலான ரயில் பயணத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட (3rd AC) பெட்டியில் பயணித்த அவர், இந்திய ரயில்களின் வசதிகளைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார். வெறும் 12 டாலர்கள் (சுமார் 1000 ரூபாய்) மட்டுமே செலவழித்து, பயணிகளுக்கு வழங்கப்படும் சுத்தமான போர்வைகள், உணவு வகைகள் உள்ளிட்ட வசதிகளால் அவர் மனம் பறிகொடுத்தார். இந்த வீடியோவில் அவரது உற்சாகமான பேச்சு ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nick & Raychel Reimer-Hurley (@nickandraychel)

ரயிலில் உலாவரும் வியாபாரிகளிடம் இருந்து சுவையான வெஜ் பேட்டி டோஸ்ட், சமோசா போன்றவற்றை வாங்கி ருசித்த அவர், இந்திய ரயில் பயணத்தின் தனித்துவமான அனுபவங்களைப் பகிர்ந்தார். பயணிகள் உறங்குவது, கூட்டமாகப் பயணிப்பது போன்ற இயல்பான காட்சிகளையும் வீடியோவில் காட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவில் ரயில் பயணம் செய்ய விரும்புவோருக்கு பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். பண்டிகை காலங்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும், 2-டயர் ஏசி பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும், கூட்டத்தைத் தவிர்க்க முன்கூட்டியே நிலையம் செல்லவும் அவர் பரிந்துரைத்தார்.

குறிப்பாக, சைடு லோயர் இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக இயற்கையின் அழகை ரசிப்பது தனக்கு மிகவும் பிடித்தமான தருணம் எனக் குறிப்பிட்டார். இந்திய ரயில்கள் நாட்டை ஆராய்வதற்கு அற்புதமான வழி என உற்சாகத்துடன் தெரிவித்த அவரது வீடியோ, பயண ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.