இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். இவருக்கு தற்போது ஆன்லைன் சூதாட்டம் செயலி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போன்ரூ று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, பிரபல நடிகர் சோனு சூட் உள்ளிட்டோருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில் யுவராஜ் சிங் செப்டம்பர் 23ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை வலியுறுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே இந்த வழக்கில் சுரேஷ் ரெய்னா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ரானா டகுபதி, நடிகை ஊர்வசி ரவுதேலா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.