தெலுங்கானா மாநிலமான ஹைதராபாத்தில் மேதா என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாகியாக மலேலா ஜெய பிரகாஷ் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரகாஷ் கடந்த 6 மாதங்களாக பள்ளியில் இயங்கி வரும் கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார். அதாவது கீழ்தளத்தில் உள்ள கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வர, மேல் தளத்தில் போதை பொருள் தயாரிப்பு நடந்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி வாரந்தோறும் உற்பத்தியாகி வந்த இந்த போதைப் பொருட்கள் ஸ்கூல் லீவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இது தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுமார் 7 கிலோ போதைப்பொருள், 21 லட்சம் பணம் மற்றும் இவை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

“>

 

மேலும் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது 2 சகாக்களை கைது செய்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு பள்ளியில் கெமிஸ்ட்ரி லேபில் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.