தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் காலை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு ஏர்போர்ட் முதலே தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் வழி நெடுகிலும் தொண்டர்கள் வெள்ளம் கடல் அலை போல் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரமாக தன்னுடைய பிரச்சார வாகனத்தில் நடிகர் விஜய் கடந்து வந்து திருச்சி மரக்கடை பகுதியை அடைந்துள்ளார்.

தற்போது அவர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் திருச்சியில் தொடங்கினால் எல்லாம் வெற்றியாக அமையும் என்றார். இந்த நிலையில் நடிகர் விஜய் பேசும்போது அவருடைய மைக் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் தொண்டர்கள் கேட்கல கேட்கல என கத்துவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.