தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் காலை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு ஏர்போர்ட் முதலே தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்த நிலையில் வழி நெடுகிலும் தொண்டர்கள் வெள்ளம் கடல் அலை போல் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரமாக தன்னுடைய பிரச்சார வாகனத்தில் நடிகர் விஜய் கடந்து வந்து திருச்சி மரக்கடை பகுதியை அடைந்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் பேச தொடங்கிய இரண்டு நிமிஷத்தில் கூட்டத்திற்குள் திடீரென ஆம்புலன்ஸ் புகுந்தது. இதனால் விஜய் பேசாமல் அமைதியாக நின்ற நிலையில் அங்கிருந்த தொண்டர்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விட்டனர். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் மயங்கி விழுந்ததால் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்து அந்தப் பெண்ணை மீட்டு ஹாஸ்பிடல் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பாகவும் அதிமுக பிரச்சார கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் நுழைந்ததால் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட அது பெரும் சர்ச்சையாக மாறியது குறிப்பிடத்தக்கதாகும்.
