2026 ஃபீஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி படைத்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, அந்த அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி தனது தாயைக் நெகிழ்ச்சியோடு கட்டியணைத்த உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் மொராக்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியதைத் தொடர்ந்து, மைதானத்தில் இருந்த தனது தாயைக் கண்ட சைபாரி, ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியையும் ஆனந்தக் கண்ணீரையும் பகிர்ந்துகொண்டார்.
Les larmes de joie de Saibari dans les bras de sa maman après la qualification 🥹🇲🇦 pic.twitter.com/DoqtxnPRmR
— Le360 (@Le360fr) June 30, 2026
சாதனையின் உச்சத்தில் இருந்த மகனைக் கண்டு நெகிழ்ந்த அவரது தாயும் கண்ணீர் மல்க அவரை முத்தமிட்டு வாழ்த்திய இந்த உணர்வுப்பூர்வமானக் காட்சி, மைதானத்தில் இருந்த ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் நெகிழச் செய்துள்ளது.
கால்பந்து விளையாட்டில் எத்தனையோ வெற்றிக் கொண்டாட்டங்கள் இருந்தாலும், தாயின் தியாகத்தையும் அன்பையும் போற்றும் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.
கடினமானப் பாதைகளைக் கடந்து உலகக்கோப்பை போன்ற மிக உயரிய மேடையில் மொராக்கோவின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்த சைபாரி, தனது இந்த வரலாற்றுச் சாதனையைத் தாய்க்கு அர்ப்பணிக்கும் விதமாகப் பாசத்தைப் பொழிந்தது அனைவரது இதயங்களையும் தொட்டுள்ளது. “வெற்றிகள் பல பெற்றாலும் தாயின் மடிக்கு ஈடானது எதுவுமில்லை” என்று இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் ரசிகர்கள், மொராக்கோ அணியின் அசாத்தியமான ஆட்டத்திற்கும், சைபாரியின் இந்தத் தூய்மையான அன்பிற்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
