ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் வைத்து வருகின்றனர். தொடரின் அறிமுக விழாவில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வியுடன் சூரியகுமார் கைகுலுக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் மற்றும் மோசின் நக்வியின் மிரட்டல் பேட்டிகள் காரணமாக, அவரை புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சூரியகுமாரின் இந்த செயல் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனால், இந்திய அணி பாகிஸ்தானுடன் ஆசியக் கோப்பையில் விளையாடுவதை கூட சில ரசிகர்கள் எதிர்த்து, போட்டியை புறக்கணிப்பதாக கூறி வருகின்றனர்.