பாகிஸ்தானின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக டி20 போட்டி மூலம் அறிமுகமான அவர், பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியுடனே விளையாடியிருந்தார். கடந்த 6 வருடங்களில், பாகிஸ்தான் அணிக்காக மொத்தம் 34 சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற உஸ்மான், தற்போது தனது சர்வதேச பயணத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்டுகள், 16 டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள அவர், டெஸ்ட் போட்டியில் ஒரே ஒரு முறையே விளையாடியுள்ளார்.

“>

 

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு எதிராக அவர் விளையாடிய டெஸ்ட் போட்டியே, அவரது கடைசி சர்வதேச போட்டியாகும். மேலும், ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில், இரண்டாவது போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களை பதிவு செய்தார்.

அதேபோன்று, 2019-ல் மீண்டும் இலங்கையை எதிர்த்து நடந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இரண்டாவது மைல்கல்லையும் எட்டினார். 2018 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவரது ஓய்வு, பாகிஸ்தான் அணிக்குள் ஓர் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது எனக் கூறலாம்.