2025 ஆசிய கோப்பை தொடரின் தொடக்கப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்த கேப்டன் சூர்யகுமார் யாதவின் முடிவு வெற்றிக்கு வழிவகுத்தது. குல்தீப் யாதவ் தனது சுழற்பந்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த, ஷிவம் துபே மூன்று விக்கெட்டுகளை குவித்தார். இவர்களின் மாபெரும் ஆட்டத்தால் , ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அணி வெறும் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியபோது, அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. எந்த அழுத்தமும் இல்லாமல், குறைந்த ரன்களை எளிதில் எட்டிய இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வசீகரமான வெற்றி பெற்றது. இந்த வெற்றி, தொடரின் முதல் ஆட்டத்திலிருந்தே இந்திய அணியின் ஆதிக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
