துலீப் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மத்திய மண்டல அணிக்காக விளையாடும், மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக உள்ள ரஜத் படிதார், ஒரு அபூர்வமான கேட்ச் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
போட்டியின் 49-வது ஓவரில், சரண்ஷ் ஜெயின் பந்து வீசியபோது, இடதுகை பேட்ஸ்மன் சல்மான் நசீர், பந்தை தள்ள முயன்றார். ஆனால் பந்து, லென்த்திலிருந்து சற்று எழும்பி, அவரது கையுறையைத் தாக்கியது. அந்த பந்தை, பாயிண்ட் பகுதியில் காத்திருந்த ஃபீல்டர் பிடிக்க தவறினார்.
Excellent awareness & presence of mind! 👌
Central Zone captain Rajat Patidar completes a brilliant tag-team catch to dismiss Salman Nizar 🔥
Scorecard ▶️ https://t.co/unz0hJ66yE#DuleepTrophy | #Final | @IDFCFIRSTBank pic.twitter.com/uJBtd7buWF
— BCCI Domestic (@BCCIdomestic) September 11, 2025
இதனை தொடர்ந்து, பந்தை தரையில் விழுவதற்கு முன், அருகில் இருந்த ரஜத் படிதார், தனது புத்திசாலித்தனத்தையும், துல்லிய நேரத்தையும் பயன்படுத்தி முன்னோக்கி டைவ் செய்து, பந்தை கைப்பற்றி ரசிகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றார்.
இந்த அதிரடி கேட்ச் எடுத்த தருணம் வீடியோவாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த கேட்ச் குறித்து “துலீப் டிராபியின் சிறந்த ஃபீல்டிங் கணம்” எனக் குறிப்பிடுகின்றனர்.
