ராஜஸ்தானின் வரலாற்று சிறப்புமிக்க பூண்டி நகரில் பதிவான ஒரு பக்தி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்திய பாரம்பரிய ஆடையில் சாலையில் நடந்து செல்கிற ஒரு வெளிநாட்டு தாயும், அவரது இரண்டு பிள்ளைகளும், “நமஸ்தே” எனும் இந்திய மரியாதையை வெளிப்படுத்தி, பின்னர் பிரபல ராமர் பாடலை முழு மனதுடன் பாடியுள்ளனர். இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனங்களை உருக்கும் வகையில் இருந்ததால், இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவில் உள்ள பிள்ளைகள் பரம்பரிய குர்தா-பாய்ஜாமாவில் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உண்மையான பக்தி மற்றும் இசை திறமை, இந்தி மொழியை இயல்பாகப் பேசும் வித்தை, எல்லாம் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. பொதுவாக வெளிநாட்டு பிள்ளைகள் இந்தி பாடல்களை இவ்வாறு உணர்வுபூர்வமாக பாடுவது அபூர்வம் என்பதால், இந்த வீடியோ மிகவும் விசேஷமானதாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பிளாட்பாரத்தில் `bundi_view` என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 75,000-க்கும் மேற்பட்ட பார்வைகளையும், 6,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. “இந்த அம்மாவின் பெயர் கரோலினா கோஸ்வாமி” என ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார்; மற்றொருவர் “இந்த பிள்ளைகள் மனதை உருக்கும் விதத்தில் பாடியிருக்காங்க” என பதிவு செய்துள்ளார்.
