வனவிலங்குகளின் காட்சிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. இயற்கையின் அழகு, அதே சமயம் அதன் வித்தியாசமான தருணங்கள் கூட நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளிவந்த ஒரு காணொளி, ஜாகுவார் மற்றும் முதலை இடையே நடந்த கொடூரமான வேட்டையை உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் ஆழமாக கவனிக்கச் செய்துள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி, Instagram-இல் @andresclausen என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இக்காணொளியில், வெயிலில் சூரிய குளியல் மேற்கொண்டு ஓய்வெடுத்து கொண்டிருந்த ஒரு பெரிய முதலை, கண் இமைக்கும் நேரத்தில் ஒரு ஜாகுவாரின் விரைவு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தது .

 

 

View this post on Instagram

 

A post shared by Andrés Clausen (@andresclausen)

வீடியோவின் தொடக்கத்தில், ஒரு ஆற்றின் நடுவில் உள்ள மேட்டில், பெரிய முதலை ஓய்வெடுத்து கொண்டிருக்கும் காட்சியை காணலாம். அதன் அருகில் ஒரு ஹெரானும் அமைதியாக அமர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில், தண்ணீருக்கடியில் பதுங்கியிருந்த ஜாகுவார் ஒன்று, திடீர் மின்னல் தாக்குதலில் முதலையின் கழுத்தை தாடைகளால் பிடித்து இறுக்குகிறது.

தப்பிக்க முயன்ற முதலை எவ்வளவு போராடினாலும், ஜாகுவாரின் வலிமை மற்றும் வேட்டை திறமைக்கு முன் அது நிச்சயம் தோற்கிறது. வெறும் 25 வினாடிகளில் அந்தப்பெரிய முதலை இறந்துவிடுகிறது.

இக்காணொளி இணையத்தில் வெளியானதும், இது மில்லியன் கணக்கில் பார்வைகள் பெற்றுள்ளது. தற்போது வரை 2.55 லட்சம் ‘விருப்பங்கள்’ பதிவாகியுள்ளன. பல பயனர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து தங்கள் வியப்பையும் உணர்வுகளையும் பகிர்ந்துள்ளனர்.