உத்திராகண்டின் ஹல்த்வானி பகுதியில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஜல் ஜோஷி (24) என்ற இளைஞர் தனது தந்தையின் கண் முன்னே கத்தியால் தனது கழுத்தை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சைக்கு முன்னரே அவர் உயிரிழந்ததாக மருத்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

சஜல் தற்கொலை செய்யும் முன் 6 நிமிட 32 விநாடிகள் நீளமான வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவில், “மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் நோய்தான் என்னை வாழ விடவில்லை. என் மனம் இதற்கேற்ப சக்தி வாய்ந்ததல்ல” என கூறியுள்ளார். தன்னுடைய உடல்நலக் குறைபாடுகளால் ஒரு வருடம் துன்பப்பட்டு வந்ததாகவும், தொடர்ச்சியான சிகிச்சைகளால் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நடிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் கொண்ட சஜல், முந்தைய காலங்களில் பல கல்வி மற்றும் அறிவியல் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். ஆனால் கடைசி இரண்டு ஆண்டுகளாக அவருடைய வீடியோக்கள் வெளியிடப்படவில்லை. தனது குடும்பம் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றியதாகவும், தற்கொலை என்பது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவாகும் என்றும் வீடியோவில் கூறியிருக்கிறார். “இந்த வலியை கடவுள் கூட யாருக்கும் கொடுக்கக்கூடாது” என்ற அவரது வார்த்தைகள் சமூக ஊடகங்களில் வேதனையை ஏற்படுத்தி வருகின்றன.