ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது மீது நடைபெற்று வரும் வழக்கின் தொடர்ச்சியாக நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்தப்பட்ட தர்ஷன், தனது சிறை அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அப்போது நீதிபதியிடம் தர்ஷன் கூறுகையில், “நான் பல நாட்களாக சூரிய ஒளியையே பார்க்கவில்லை. என்னைச் சுற்றி பூஞ்சைகள் சூழ்ந்து பயமுறுத்துகின்றன. நான் அணிந்திருக்கும் ஆடைகளிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு பரிதாபகரமான சூழலில் என்னால் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு குறைந்தபட்சம் விஷமாவது கொடுங்கள்” எனவே கெஞ்சினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி, “அது சாத்தியமில்லை” என கூறினார். தர்ஷன் கூறிய இந்த பேச்சு நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
