வீட்டில் ஹோமம் நடைபெறும் சூழல். புகை கண்ணை எரிப்பதால் குழந்தைகள் அமர முடியாத நிலை ஏற்படுவது உண்டு. ஆனா இந்நிலையில் ஒரு சிறுவன் செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அந்த ஹோமம் பூஜையின் போது வரும் புகையிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, குழந்தை Iron Man முகமூடி அணிந்து அமர்ந்திருக்கின்றார். இந்த சிறிய யோசனை இப்போது இணையத்தை அதிர வைக்கும் வகையில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sunidhi Kohli (@sunidhi_kohli_)

இந்த வீடியோவில், குடும்பம் முழுவதும் ஹோமத்தில் ஈடுபட்டிருக்கும் போது, அந்தச் சிறுவன் மட்டும் ஹீரோ போல Iron Man மாஸ்க் அணிந்து அமர்ந்திருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் அனைவரும் அதைக் கண்டு சிரித்தனர். அதன் பிறகு அனைவரும் குழந்தையின் யோசனையை கண்டு மகிழ்ந்தனர்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒருவர், “Gen Alpha undefeated yaa!” என கமெண்ட் போட்டுள்ளார். சிரிப்பு எமோஜிகளுடன் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை எட்டியுள்ளது. “பொம்பையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திய புத்திசாலி பையன்” என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தக் குழந்தையின் நேர்த்தியான யோசனை, இன்னொரு முறை நம் இதயங்களை வென்றுவிட்டது.