ஒடிசா மாநிலத்தில் ஒரு பசுமாடு இரண்டு நாட்களாக உணவு சாப்பிடாமல் அவதிப்பட்டு வந்தது. இந்த மாடு வலியால் சத்தமிடுவதை கவனித்த கால்நடை மருத்துவர் ஒருவர், அதை பரிசோதித்தபோது, மாட்டின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால், மாட்டிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

மூன்று மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள் மாட்டின் வயிற்றில் இருந்து 40 கிலோ எடையுள்ள பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இந்த சம்பவம் பிளாஸ்டிக் பைகளால் விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறது. தற்போது, அந்த பசுமாடு உடல்நலம் தேறி, நல்ல நிலையில் இருப்பதாக மாவட்ட தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார்.