அதிமுகவில் முக்கிய பகுதியாக உள்ள கொங்கு மண்டலத்தில், அண்மையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் கடந்த காலங்களில் கொங்கு பகுதியில் கட்சிக்கு பலம் சேர்த்த முக்கிய தலைவராக இருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனின் இல்லாததும் அதிமுக வளர்ச்சிக்கு பாதிப்பாக அமையாது என்பதைக் கூறும் விதமாக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வருகிற 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை, கொங்கு மண்டலத்தில் தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்த பிரச்சாரம் பிரம்மாண்டமாகவும், மாவட்ட மக்களுக்கு தாக்கமளிக்கும் விதமாகவும் இருக்க வேண்டுமென, அப்பகுதி நிர்வாகிகளுக்கு அவர் உறுதியான உத்தரவு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், செங்கோட்டையன் இல்லாமலே கொங்கு மண்டலத்தை அதிமுக முழுமையாக கைப்பற்றும் என்பதை நிரூபிக்கவென்றே இந்த நடவடிக்கை என கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.