அதிமுகவில் அண்மையில் நிகழ்ந்த அதிகாரப் பறிப்பு, ஆதரவு மாற்றம் உள்ளிட்ட சூழ்நிலைகள் கட்சியின் கொங்கு மண்டலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பொறுப்புகளில் இருந்து விலகியதாக கூறப்பட்ட பலர், மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில், இன்று (செப்.9) சேலத்தில் நடைபெற்ற சந்திப்பில், கோபி, அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய தோழர்கள் நேரில் இபிஎஸ்-ஐ சந்தித்து தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கோபி அதிமுக நகர செயலாளர் கணேஷ் மற்றும் கோபி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேலு ஆகியோர் முக்கிய தலைமை வகித்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையை வலுப்படுத்தும் வகையில் கொங்கு மண்டலத்தில் பலரும் மீண்டும் அணிவகுத்துவரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக்கு எதிராக இல்லை என்பதையும், கட்சி ஒற்றுமையைப் புனரமைப்பது சாத்தியமென்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
