கடந்த சில நாட்களாக நாய்களால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி இதை மேலும் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. காணொளியில், ஒரு நபர் சாலையில் அமைதியாக நடந்து செல்கிறார். திடீரென, ஒரு நாய் அவரைப் பார்த்து ஆக்ரோஷமாகக் குறைக்கத் தொடங்குகிறது. இதனால் பயந்து போன அந்த நபர், அவசரத்தில் சாலையை கவனிக்காமல் ஓட முயல்கிறார்.
நாயைப் பார்த்து பயந்து ஓடிய அந்த நபர், துரதிர்ஷ்டவசமாக சாலையில் வந்த ஒரு கனரக வாகனத்தில் மோதி தடுமாறி கீழே விழுகிறார். இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், தெரு நாய்களால் ஏற்படும் ஆபத்து குறித்து கடும் கோபத்தையும் கவலையையும் தங்கள் கருத்துகளாகப் பதிவு செய்து வருகின்றனர்.
