சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதில், ஒரு பெண் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது, ஒரு வீட்டு வாசலில் நின்ற நாய் குரைக்க, பயந்த அந்தப் பெண், வீட்டில் இருந்தவரிடம் நாயைக் கட்டுமாறு கேட்கிறார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பின்னர், வீட்டில் இருந்து வந்த மற்றொரு பெண்ணும் இந்த வாக்குவாதத்தில் கலந்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், முதலில் வந்த நபர் சாலையில் நின்ற பெண்ணை அறைகிறார். அந்தப் பெண் தனது வீட்டிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க, கையில் குச்சியுடன் மற்றொரு நபர் அங்கு வருகிறார். இந்தத் தகராறால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடி, பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.