தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோ, 8 சீசன்களை வெற்றிகரமாக முடித்து ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது. இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று, “சீத்தம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு” படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை தேஜஸ்வி மடிவாடா, தனது கெரியர் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தனது தொழில் வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கூறி, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த இளம் நடிகை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த தேஜஸ்வி, நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் பிஸியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் மூலம் பிரபலமாக இருக்கும் அவர், சமீபத்திய பேட்டியில், “பிக்பாஸைப் பார்க்கும் பார்வையாளர்கள் நம்மை தவறாகப் புரிந்து, எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இதனால், இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வாய்ப்பு வழங்க தயங்குகிறார்கள்.

பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டது என் கெரியரை நாசமாக்கிவிட்டது,” என்று வேதனையுடன் கூறினார். இவரது இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் பேச வைத்துள்ளது.