தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது 25வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழில் ‘சக்தி திருமகன்’ என்றும், தெலுங்கில் ‘பத்ரகாளி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்கிறார். படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனி தனது தனித்துவமான இசை மற்றும் நடிப்பால் தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடித்தவர். சக்தி திருமகன் திரைப்படம் ரசிகர்களுக்கு ஆக்ஷன் மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்துடன் ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .
