பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை அடுத்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. கிரிஸில்டா, ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தான் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சூழலில், ஜாய் கிரிஸில்டா முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதி கோரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். “அப்பா, உங்களுடைய ஆட்சியை நம்பி, என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளனர். தயவு செய்து நீதி வழங்குங்கள். தவறு செய்தவர் எப்படி தண்டனையின்றி சுதந்திரமாக இருக்க முடியும்?” என்று கைகூப்பி கேட்டுக்கொண்டார். இவரது புகார் மற்றும் வேண்டுகோள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது.
