பாலிவுட் நடிகை உர்வசி ராவ்தேலா, எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முன்னிலை வகிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், ரசிகர்கள் செல்பி எடுக்க மொபைலை கொண்டு வந்த போது, அவர் திடீரென அவர்களின் மொபைல்களை பறித்துக் கொண்டு விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் அவரிடம் மொபைலை தர மறுத்தபோதும், உர்வசி அதை ஒரு மகிழ்ச்சியான சம்பவமாக மாற்றினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

இந்த சம்பவம் நடந்த நிகழ்வில், உர்வசி ராவ்தேலாவை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அப்போது சிலர் செல்பி எடுக்க மொபைலை நீட்டியபோது, அவர் எதிர்பாராத விதமாக மொபைல்களை பறித்து சிரித்தபடி தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார். பிறகு அந்த மொபைல்களை பாதுகாப்பாளர்களிடம் கொடுத்து மீண்டும் உரிய ரசிகர்களிடம் கொடுக்கச் சொன்னார். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சிரிப்பை கிளப்பியது. சமூக வலைதளங்களில் “மொபைலை பறிக்கிற முதல் ஹீரோயின்!” என்ற வரவேற்பு கமெண்ட்களும் குவிந்தன.