முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பா பயணத்தின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பிரபலமான OXFORD பல்கலைக்கழகத்தில் தமிழரின் பெரிய சிந்தனையாளர் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் திருவுருவப் படத்தை இன்று (செப்.5) சிறப்பாக திறந்து வைத்தார்.
தமிழர்களின் சமத்துவ மற்றும் பகுத்தறிவு சிந்தனையை உலகமெங்கும் பரப்பும் வகையில், பெரியார் நினைவாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக நிர்வாகிகள், தமிழர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். OXFORD பல்கலைக்கழகத்தில் பெரியாருக்கு இடம் கொடுத்ததற்கு முதல்வர் தனது நன்றியை தெரிவித்தார். இது தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, #Oxford-இல் பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் உருவப் படம்!#CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford pic.twitter.com/9hgG48DHDA
— M.K.Stalin (@mkstalin) September 5, 2025
“>
