உக்ரைன்-ரஷியா போர் மூன்றாவது ஆண்டில் தொடரும் நிலையில், ஐரோப்பாவில் மீண்டும் ஒரு பெரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

இதனை ஒட்டி, 2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு முக்கிய நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் பிரான்ஸ் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. போர் நேரத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை சிகிச்சை அளிக்கும் அவசியம் ஏற்படக்கூடும் என்பதால், மருத்துவ வசதிகளை சீரமைக்கும் பணிகளில் தீவிரம் காட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸின் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய நாடுகளிடையே புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.