ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரும் போர், காசா பகுதியில் மனிதாபிமான பேரழிவை உருவாக்கியுள்ளது.
இந்தப் போர் காரணமாக காசா நகரம் முழுமையாக உருக்குலைந்து போயுள்ளது. இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுகள் மற்றும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 50,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆய்வில், 21,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் இயல்பான செயல் திறன்களை இழந்து, உடல் மற்றும் மன அழுத்தத்தால் பேரிதர்களாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்கள், குடிபெயர்ந்த நிலை, சுகாதார வசதிகள் இல்லாமை ஆகியவை பாலஸ்தீனில் வாழும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியுள்ளதாகவும், இந்நிலையை சர்வதேச நாடுகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என ஐ.நா வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.
