தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 22 முதல் 25 வரை தேர்வு நடைபெறும். அதேபோல், 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 25 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கே இத்தேர்வுகள் பொதுவாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேதி நிர்ணயம் – மாணவ, மாணவிகளுக்கு அறிவிப்பு!

6 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 26 வரை காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேநேரம், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வுகள் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறும். காலை நேரத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என்றும், பிற்பகலில் பிளஸ்-1 மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. தேர்வுக்கான திட்டமிட்ட அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து மாணவர்களும், ஆசிரியர்களும் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.