தினமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டே இருக்கிறது. சில வீடியோக்கள் அதிர்ச்சியையும் தருகின்றன; சில வீடியோக்கள் கண்ணீர் வரும் வரை சிரிக்கவைக்கும். தற்போது ஒரு அற்புதமான வீடியோ இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. வீடியோவை பார்த்த பிறகு, நிச்சயமாக நீங்கள் கூட சிரிப்பை அடக்க முடியாமல் போவீர்கள். காரணம், “ஃப்ரி வைஃபை” என்ற வார்த்தைக்கு ஆசைப்பட்ட ஒருவர், நேரில் சென்று தனது செல்போனை இழந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by VIRAL.BOX (@viralbox143)

அந்த வீடியோவில், கார்போர்ட் ஆல் ஆன ஒரு சுவரில் “Scan for Free Wi-Fi” என்று எழுதப்பட்ட QR குறியீடு உள்ளது. அதை கண்டதும், வைஃபை இலவசமா?! என்று ஆச்சரியத்துடன் ஓடி வந்த ஒருவர், தன் மொபைலை அந்த QR குறியீட்டின் அருகே கொண்டு செல்கிறார். அடுத்த நொடியில், சுவரின் மறுபுறம் மறைந்திருந்த நபர் ஒருவர், அந்த மொபைலை மின்னல்போல் பறித்துக்கொண்டு ஓடுகிறார்.

இந்த சிரிப்பை தூண்டும் வீடியோ, @viralbox143 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து, சிரித்து கொண்டிருக்கிறார்கள். “ஃப்ரீ வைஃபை எடுக்க போயி, செல்போனை தொலைச்சுட்டாரு பாவம்!” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “இது தான் பக்கா ஃப்ரீ திரட்டு!” என கலாய்த்து எழுதியுள்ளார். இனி எவரும் “ஃப்ரீ” என்று பார்த்தவுடனே ஓடுவதற்கு முன், இருமுறை யோசிக்க வேண்டிய அவசியம் உள்ளது.