இன்று சமூக வலைதளங்களில் லைக் மற்றும் வியூஸ் என்றால் போதும் பலர் எதையும் செய்ய தயாராக உள்ளனர். அந்த வகையில், தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் ஒரு ஆண் தனது பைக்கை சாலையில் ஓட்டிக் கொண்டிருக்கும் போது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவனிடம் ஸ்டீயரிங் வசதியை கொடுத்துவிடுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by SON👼OF🔥WARRIOR👑 (@bhevin_simha)

அந்த வீடியோவில் பரபரப்பான சாலையில் பைக் ஓட்டும் அந்த நபர், சிறுவனிடம் ஹேண்டிலை கொடுக்கிறார். சிறுவன் பைக் ஓட்ட முயற்சிக்க, பைக்கின் வேகத்தையும் அந்த நபர் அதிகரிக்கிறார். இதனால் அந்த சிறுவன் கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற ஒரு ஆபத்தான செயலை, கேமராவில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பார்வையாளர்கள் இது போன்ற “வியூஸ்” பைத்தியத்திற்கு குழந்தையின் உயிரை ஆபத்தில் இட்டது தவறு என கூறி உள்ளனர்.

இந்த வீடியோவை bhevin\_simha என்ற இன்‌ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது. இது வரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, தங்கள் கோபம் மற்றும் சோகத்தை கருத்துக்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், “இப்படி ஸ்டண்ட் பண்ணுறவங்களை போலீஸ் பிடிக்கணும்!” என கோரிக்கை விடுத்துள்ளார்.