சீனாவின் ஹுனான் மாகாண தலைநகரான சாங்ஷா நகரத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. ஒரு பெண், தனது நெருங்கிய தோழி தான் தனது கணவருடன் கடந்த 5 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்தது தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்தார். ஆனால் அவர் அமைதியாக இருப்பதற்குப் பதிலாக, அந்த விவகாரத்தை தனது அண்டை வீட்டுக்காரர்களுக்கும் தெரிய செய்ய முடிவு செய்தார்.

அதற்கு மனைவி என்ன செய்தார் தெரியுமா?. அவர் தனது வீட்டின் வெளி சுவரில் பெரிய பதாகைகள், கொடிகள் போன்றவற்றில் எழுதி தொங்கவிட்டார். “இவர் என்னுடைய 12 ஆண்டு கால நெருங்கிய தோழி. கடந்த 5 ஆண்டுகளாக என் கணவருக்கு ‘சிறப்பு சேவைகள்’ அளித்து வருகிறார்” என்றும், “அலுவலக நேரத்திலும் ஹோட்டல்களில் சந்தித்துள்ளனர்” என்றும் அதில் எழுதி இருந்தது. இதைக் கண்ட மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் ஒரு நேரத்தில் பேப்பர் மற்றும் வைவோ போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலர் இந்த மனைவியின் நேர்மையும் துணிச்சலும் பாராட்ட, சிலர் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை எல்லோருக்கும் தெரிய செய்வது தவறு என்றனர். பின்னர் அதிகாரிகள் அந்த பதாகைகளை அகற்றினாலும், இந்த சம்பவம் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.