இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு கப்பல் கரையை நோக்கி வருகிறது. ஆனால், பொறுமையாகக் காத்திருக்காமல், ஒரு நபர் கப்பலில் இருந்து கரைக்கு குதிக்க முயல்கிறார். இந்த முயற்சியில் அவர் தடுமாறி, கப்பலுக்கும் கரைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்து விடுகிறார். இந்த ஆபத்தான சூழல் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த நபர் சரியான நேரத்தில் மீட்கப்படவில்லை என்றால், கப்பலுக்கும் கரைக்கும் இடையே சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும். ஆனால், அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, கடுமையான முயற்சியால் அவரை பாதுகாப்பாக மீட்டனர். இந்த தருணம் காணொளி வைரலாகி பொறுமையின்மையால் ஏற்படும் ஆபத்தை மக்களுக்கு உணர்த்துகிறது.
