ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. குனார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், மேலும் 1,300 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு முதற்கட்டமாக இந்தியா 15 டன் உணவுப் பொருட்கள் மற்றும் 1,000 குடும்பத் தற்காலிக கூடாரங்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக வசதி ஏற்படுத்தும் வகையில் உதவிகள் தரப்பட்டுள்ளன.

“>

 

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதுகுறித்து கூறியதாவது, “ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மௌல்வி அமீர் கான் முத்தகியுடன் இன்று உரையாடினேன். நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்து இழப்புக்கு இரங்கல் தெரிவித்தேன். இன்று காபூலில் 1000 குடும்பங்களுக்கு கூடாரங்கள் வழங்கியுள்ளோம். மேலும், காபூலில் இருந்து குனாருக்கு 15 டன் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாளை முதல் இந்தியாவில் இருந்து மேலும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படும்” என்றார். அவரது இந்த பதிவு சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்றுள்ளது.

“>

 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை வெளியிட்டு, “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா துணையாக இருக்கும். சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க தயாராக உள்ளோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என தெரிவித்தார். இந்தியாவின் இந்த நடவடிக்கை ஆப்கானிஸ்தானில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.