விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சியில் தெரு நாய்கள் தொடர்பான விவாதம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஒரு தந்தை, தனது மகன் நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் இறந்ததாக மனமுருக கூறினார். இதற்கு பதிலளித்த ஒரு பெண்மணி, “எனக்கு இரண்டு முறை விபத்து நடந்தது, இரண்டு முறையும் குழந்தைகள் தான் குறுக்கே வந்தனர்” என்று கூறினார்.
இந்த பெண்ணின் கருத்தைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத் கடும் கோபத்திற்கு ஆளானார். அவர், “நாயும் புள்ளையும் ஒன்னா என்ற ரீதியில் “முட்டாள்தனத்தின் உச்சம், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று காட்டமாக பதிலளித்தார். ஒரு தந்தையின் இழப்பை குறைத்து மதிப்பிடும் வகையில் பேசியது அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இந்த காணொளியும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
