இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. இருப்பினும் வங்கியின் செயல்பாடுகள் என்பது பொதுமக்களுக்கு அன்றாட பயன்பாடு தான். தினசரி ஏதாவது ஒரு தேவைக்காக வங்கிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் சற்று சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு மொத்தம் ஏழு நாட்கள் விடுமுறை வருகிறது.
இந்த ஏழு நாட்கள் விடுமுறையை பொதுமக்கள் சரியாக திட்டமிட்டு வங்கி வேலைகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி செப்டம்பர் 7ஆம் தேதி, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. இதேபோன்று செப்டம்பர் 13ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் செயல்படாது.
வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாடி நபி என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு அரசு விடுமுறை. மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 7 நாட்கள் விடுமுறை வரும் நிலையில் இதனை முன்கூட்டியே பொதுமக்கள் திட்டமிட்டு வங்கி வேலைகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
