ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை, அவருக்கு அறிமுகமான இருவர் வேலை தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி நேற்று காரில் அழைத்து சென்றுள்ளனர். அந்த வழியில், மேலும் மூன்று இளைஞர்கள் காரில் ஏறி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பங்கிரிபொசி பகுதியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பலசொரி பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
அங்கு ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில், அந்த இளம்பெண்ணை 5 பேரும் மிரட்டிக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். துயரத்திற்கு உள்ளான இளம்பெண்ணை, பின்னர் காரிலிருந்து சாலையோரம் வீசி விட்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பின் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர். இதுவரை சம்பவத்தில் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மயூர்பாஞ்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
