வரும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு, மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை வசதியாக்கும் நோக்கில், ரயில்வே துறை நாடு முழுவதும் 150 பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கவுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 21 முதல் நவம்பர் 30 வரையிலான காலக்கெட்டத்தில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தென் மத்திய ரயில்வேயில் மட்டும் 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் சேவையை மேம்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வேயில் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படும். பண்டிகை கால பயணத்துக்காக முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ளன என்றும், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென ரயில்வே தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
