தமிழக அரசியலில் களம் இறங்கிய நடிகர் மற்றும்  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக, இன்று (ஆக.30) சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்களை விஜய் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த சந்திப்பில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலையும் முன்னிட்டு மாவட்டங்களின் நிலைமை, கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், தொண்டர்கள் பங்களிப்பு மற்றும் சுற்றுப்பயண திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. தவெக தலைவர் விஜய் தேர்தலை முன்னிட்டு மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் ஆதரவை  கேட்கும் நோக்கத்துடன் இந்த சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.