இன்ஸ்டாகிராமில் ஒரு தந்தையின் மனதை உலுக்கிய காணொளி வைரலாகி வருகிறது. இதில், ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் தவறி விழுந்து கடுமையாக காயமடைகிறான். அந்த பலத்த அடியால், அந்த சிறுவன் உயிரிழந்து விடுகிறான். இந்த இழப்பு அந்த தந்தையை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது. மகனை இழந்த வலி அவரை வாட்டி வதைக்க, அவரது மனைவி அவருக்கு ஆறுதல் அளிக்க ஒரு சிறப்பான பரிசை வழங்குகிறார்.
அந்த பரிசு வேறு எதுவுமல்ல, அவர்களது இறந்த மகனின் சிறிய உருவ பொம்மை. இந்த காணொளியை பார்க்கும் நெட்டிசன்கள் அந்த தந்தைக்கு ஆறுதல் கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
