ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணை இன்று நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நிலம் கைப்பற்றல் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்கில், ஃபிரோஸ் குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், அரசு வழங்கிய இழப்பீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிபதி அவரை நேரில் கடுமையாக எச்சரித்து திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“கமிஷன் வேணுமா உங்களுக்கு? ஒவ்வொரு கேஸ்லயும் கமிஷன் வேணுமா?” என்ற வார்த்தைகளில் ஆரம்பித்த நீதிபதி உரை, அதிகார பதவியை தவறாக பயன்படுத்தும் சிலருக்கு சரியான பதிலடி என நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “அரசு யாரையாவது நில உரிமையாளர் என்று அங்கீகரித்திருப்பது இருந்தால், உங்களுக்கு அதை எதிர்க்க என்ன அதிகாரம் இருக்கு?” எனக் கேட்டு, “நீங்கள் வழக்குக்கு அந்நியர்… குரங்கா நடந்து, இடையில் வந்து சண்டை போடுற மாதிரி வேணாம்” என ஆவேசமாக திட்டினார்.

“>

 

தொடர்ந்து, “எவ்வளவு சொத்துகள் சேர்த்திருக்கீங்க? விசாரணை நடத்தட்டுமா? உங்களை எதிர்த்து இப்பவே எஃப்பிஐஆர் பதிவு பண்ணலாமா?” என பயங்கர எச்சரிக்கையும் விடுத்துள்ளார். நீதிபதியின் இந்த வார்த்தைகள் நீதிமன்றத்தில் உள்ளவர்களை திடுக்கிட்ட நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ நெடுவீட்டில் பரவ, “அரசியல்வாதிகள் மட்டும் இல்ல, அதிகாரிகளும் கமிஷனுக்காக உழைக்கிற மாதிரி இருக்கே… நீதிமன்றமே சரியான நேரத்தில் பதிலடி கொடுத்திருக்கு” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நீதிபதி அளித்த நேரடி கண்டனம், சமூகத்தில் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் சிலருக்கு நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.