அமைச்சர் சேகர்பாபு கந்தகோட்டத்தில் நடைபெற்ற விழாவில் 199 பக்தர்களுக்கு பயண வழி பைகள் வழங்கி ஆன்மீக பேருந்தை தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துள்ளார். நரியின் வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும்… ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்… என்பது போல அனைத்து தரப்பினரின் விமர்சனங்களையும் தாங்கி செல்கிறார்.

இன்னும் 2,3  மாநாடுகள் நடத்தினாலே காலி பெருங்காய டப்பா போல ஆகிவிடுவார் என்பதே எனது கருத்து. அவரது உயரம் இவ்வளவுதான். முதலமைச்சர் புகழ் கொடி இணையத்தின் உச்சியில் பறக்கிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.