தமிழக அரசியல் களத்தில் தற்போது திமுக கூட்டணிக்கு புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடாத 6 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கும் (மமக) நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் தங்களது சின்னத்தில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மமக வேட்பாளர்கள் போட்டியிட்டதுதான் தற்போது இச்சிக்கலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மமகவிற்கு தற்போது இரண்டு எம்எல்ஏ-க்கள் இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கடிதம் கட்சியின் அங்கீகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவிற்கு பெரும் சிக்கலாக உருவாகியுள்ளது.
அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய (கொமதேக) கட்சிக்கும் இந்த நோட்டீஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்தக் கட்சிகள் தனித்தனி சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவாகும் போது, கூட்டணிக்குள் இடர்ப்பாடுகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
