தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு மற்றும் விடுமுறை தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு செப்.15 முதல் 26 வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 10 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தேர்வுகள் முடிந்த பின், மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5 வரை மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளிகள் அக்டோபர் 6-ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.