மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவரது சகோதரி கோமளம். இருவரும் தங்களது வீட்டில் இரண்டு நாய் குட்டிகளை செல்லமாக வளர்த்தனர். அந்த நாய்க்குட்டிகளுக்கு சின்னு, சிஞ்சு என பெயர் வைத்தனர். சமீபத்தில் சின்னு நாய் குட்டிக்கு சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டது.

பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை அளித்தும் நோய் சரியாக இல்லை. இதனால் சோகத்தில் இருந்த சகோதரிகள் சனி தோஷ வழிபாடு நடத்தினால் நாய்க்குட்டிக்கு உடல்நலம் சரியாகி விடும் என நினைத்து கேரளா மாநிலம் குருபந்தரா ஓமலலூர் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலுக்கு நாய்களுடன் சென்றனர்.

அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் சாயாதானம் பிரசாதம் படைத்து வழிபாடு நடத்துவார்கள். அதன் மூலம் சனி பகவானின் அருள் கிடைத்து துன்பங்களும் நோயும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த கோவிலில் வழக்கமாக செல்ல பிராணிகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால் மராட்டிய சகோதரிகள் தங்களது பிரச்சினையை எடுத்துக் கூறியதால் நாய்க்குட்டிகளை கோவிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது நாய்க்கான நோய் தீரும் என்ற நம்பிக்கையுடன் சகோதரிகள் மராட்டியத்திற்கு திரும்பி சென்றனர்.