விஜய்யின் தமிழக வெற்றிக்கழக 2-வது மாநாடு மதுரையில் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் விஜய் “உங்கள் விஜய் நான் வரேன்” என்ற பாடலுடன் தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது விஜயை பார்க்க நெருங்கி வந்த தொண்டர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனைத் தாண்டி விஜயை நெருங்கிய தொண்டர்களை பவுன்சர்கள் குண்டுகட்டாக மேடையில் இருந்து தூக்கி வீசினர். இதில் ஒரு ரசிகரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வேதனையில் அழுது கதறியபடி தரையில் உருண்டார். இருப்பினும் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. விஜய் பேசிக் கொண்டிருந்ததை மட்டுமே வேடிக்கை பார்த்துள்ளனர்.

மற்றொரு வாலிபரை பவுன்சர்கள் தூக்கி வீசும் போது கம்பியை பிடித்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இந்த நிலையில் பவுன்சர்கள் தன்னை குண்டு கட்டாக தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.