சமூக ஊடகங்களில் தற்போது பரபரப்பாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடியோவில், ஒரு நபர் மேம்பாலத்தின் எல்லையில் மேலே நின்று  , கீழே செல்கின்ற வேனை பார்த்தவுடன் திரைப்படங்களில் காணப்படும் போலி ஸ்டண்ட் போன்று திடீரென குதிக்கிறார்.

ஆனால், அவருடைய கணக்கு ஜஸ்ட் மிஸ் ஆகி , நேரடியாக தரையில் விழுந்துவிடுகிறார். இந்த விழுந்ததின்  தாக்கம் மிக கடுமையாக இருந்ததால், அவர் பலத்த காயமடைந்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.  முதுகெலும்பு உடைந்திருக்க சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

“>

 

இந்த வீடியோவை @Ldphobiawatch என்ற இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்று வரும் இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த நபர் இப்போது நிற்க கூட முடியாத நிலைக்கு சென்றிருக்கலாம் என்றும், இனிமேல் ஸ்டண்ட் பற்றி  யோசிக்கமாட்டார்  என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்படியான ஆபத்தான முயற்சிகளை ‘வீரத் திறமை’ என அல்லாது, பொறுப்பற்ற செயலாக கருதி தவிர்க்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். பாதுகாப்பை புறக்கணித்து பேசும் ஸ்டண்ட் வீடியோக்கள் இவ்வகை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையான உதாரணமாக அமைந்துள்ளது.