திருவண்ணாமலை மாவட்டம், வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான மகாலட்சுமி(23) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த மகாலட்சுமியின் கணவர் அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு மகாலட்சுமியை தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மகாலட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண்ணின் உயிரிழப்பு, உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், வரதட்சணை பிரச்னைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் துயரங்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக மாமியார் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, உண்மைகளை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
